உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அக்ரி கணேஷ் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

அக்ரி கணேஷ் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

புதுச்சேரி : தவளக்குப்பம் என்.ஆர்.காங்., பிரமுகரும், புதுச்சேரி வேளாண் அறிவியல் கல்லுாரி சேர்மனுமான அக்ரி கணேஷ் 50வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.தவளக்குப்பத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்த விழாவில், முதல்வர் ரங்க சாமி பங்கேற்று, கேக் வெட்டி சால்வை அணிவித்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகம், 500 பேருக்கு வேட்டி, சேலை வழங்கினார். 1,000 பேருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.விழாவில், சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்.பி., என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்கள் மாநில, தொகுதி நிர்வாகிகள் அக்ரி கணேஷிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.முன்னதாக, புத்து மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ரமேஷ், சுரேஷ், புதுச்சேரி வேளாண் அறிவியல் கல்லுாரி பொறுப் பாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ