உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி

 வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி

திருக்கனுார்: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லூரியின், இளநிலை இறுதி ஆண்டு மாணவிகள், காட்டேரிக்குப்பம் கிராம பகுதியில், ஊரக வேளாண் பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பயிற்சி, வேளாண் கல்லூரி முதல்வர் மொகமத்யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட பொறுப்பாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோரின் தலைமையின் கீழ் மாணவிகள் ஊரக வேளாண் பயிற்சியை மேற்கொண்டனர். முகாமில், மாணவிகள் பவித்திரா பூழியில், பிரித்தி சுப்ரஜா, பிரியதர்ஷினி, பிரியங்கா, ராகவி, ராமலட்சுமி, சபிதா, சஹானா உள்ளிட்டோர், வெற்றி செல்வன் பலவகை பயிரிடல் சாகுபடி பயிற்சி மையத்தில், இயற்கை வேளாண்மை வழி தென்னையில் ஊடு பயிராக மிளகு நடவை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை