உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போர்வெல் இயந்திரத்தில் சிக்கி வேளாண் ஊழியர் கை துண்டிப்பு

போர்வெல் இயந்திரத்தில் சிக்கி வேளாண் ஊழியர் கை துண்டிப்பு

பாகூர் : போர்வெல் அமைக்கும் பணியின் போது, இயந்திரத்தில் சிக்கி வேளாண் ஊழியர் கை துண்டான சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மதகடிப்பட்டு அடுத்த கலித்தீர்த்தால்குப்பத்தை சேர்ந்தவர் முருகையன், 59. இவர் புதுச்சேரி வேளாண் துறையில் நிலத்தடி நீர் பிரிவில் போர்வெல் போடும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 7ம் தேதி, அதிகாரிகளின் உத்தரவின் பேரில், பாகூரில் சண்முகம் என்பவரது நிலத்தில் இயந்திரம் மூலம் போர்வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். போர்வெல் அமைக்கும் இயந்திரத்தை பொறுப்பாளரான கிருஷ்ணமூர்த்தி இயக்கி கொண்டிருந்தார். அப்போது அவர் இரும்பு பைப்பை எடுத்தபோது, முருகையனின் இடது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய, முருகையன் நேற்று முன்தினம் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில், ஏட்டு சக்திவேல்முருகன், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிக்கான பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மீது அஜாக்கிரதையாக வேலை வாங்கியதாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ