உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழித்தட்டு நாற்றங்கால் குறித்து வேளாண் மாணவிகள் விளக்கம்

குழித்தட்டு நாற்றங்கால் குறித்து வேளாண் மாணவிகள் விளக்கம்

திருக்கனுார்: செட்டிப்பட்டில் குழித்தட்டு நாற்றங்கால் மற்றும் மக்கும் உரம் தயாரிப்பு குறித்து வேளாண் கல்லுாரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.காரைக்கால், வேளாண் கல்லுாரியின் இறுதியாண்டு மாணவிகள் பூஜா, லாவண்யா, மதுமிதா,சக்தி பவானி மீனா, யாஷினி, லலிதா மல்லீஷ்வரி, ஸ்ரீசர்வேஷ்வரி, புஷ்பபாரதி, வர்ஷிகா, பூந்தென்றல், கார்குழலி ஆகியோர் திருக்கனுாரில் தாங்கி 'ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி' பெற்று வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக செட்டிப்பட்டு கிராமத்தில் குழித்தட்டு நாற்றங்கால் மற்றும் மக்கும் உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. திருக்கனுார் வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், களப்பணியாளர் தங்கத்துரை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.பயிற்சி முகாமில் வேளாண் கல்லுாரி மாணவிகள் பங்கேற்று, விவசாயிகளுக்கு குழித்தட்டு நாற்றங்கால் நடவு மற்றும் மக்கும் உரம் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர். திரளான விவசாயிகள் மற்றம் பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை