அ.தி.மு.க., 54வது ஆண்டு துவக்க விழா
புதுச்சேரி: அ.தி.மு.க., 54வது ஆண்டு துவக்க விழா அ.தி.மு.க., சார்பில் உப்பளம், தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநில அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆகியோர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சி கொ டி ஏற்றி, ந லத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டது. மாநில ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில துணைத் தலைவர் ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் கணேசன், வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன், மாநில துணைச் செயலாளர்கள் கணேசன், நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, குமுதன் உட்பட பலர் பங்கேற்றனர். தொண்டர்கள் உரிமை மீட்பு குழு: அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. அண்ணா துரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு மரியாதை செலுத்தினர். மாநில நிர்வாகிகள், அணி செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மகளிர் அணியினர் பங்கேற்றனர். துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன்: முத்தியால்பேட்டை காந்தி வீதி மணிக்கூண்டு அருகே நடந்த விழாவிற்கு மாநில துணை செயலாளர், வையாபுரி மணிகண்டன் தலைமை தாங்கினார். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படத்திற்கு மரியாதை செலுத்தினர். மாநில இணைசெயலாளர் காசிநாதன், தொகுதி செயலாளர் பழனிசாமி, இளைஞரணி செயலாளர் விக்னேஷ், முன்னாள் தொகுதி செயலாளர் மணி, தொகுதி தலைவர் கஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.