காலந்தோட்டம் முருகருக்கு தங்க கவசம் அ.தி.மு.க., பொருளாளர் வழங்கல்
புதுச்சேரி: அரியாங்குப்பம் காலந்தோட்டம் சிவசுப்பரமணிய சுவாமி கோவிலில் நடந்த சூரசம்ஹார விழாவில் அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தனது சொந்த செலவில் கோவிலுக்கு தங்ககவசம் வழங்கினார். அரியாங்குப்பம், காலந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தனது சொந்த செலவில் முருகனுக்கு தங்க கவசம் வழங்கினார். முன்னதாக, பூஜை செய்யப்பட்ட தங்க கவசங்கள் கோவில் உள்பிரகத்தில் உலா வந்து கோவில் நிர்வாகத்திடம் மூலவருக்கு அணிவிக்க ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தங்க கவசத்தில் முருகர் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற 500 பேருக்கு, ரவி பாண்டுரங்கன் தனது சொந்த செலவில் சில்வர் குடம் மற்றும் தாம்பூலம் வழங்கினார். விழாவில், தொகுதி செயலாளர் ராஜா, அவை தலைவர் ராஜேந்திரன், ஜெ., பேரவை இணை செயலாளர் ஜீவா, வார்டு செயலாளர் பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.