குருவிநத்தம் அரசு பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு
பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். தமிழாசிரியர் இரிசப்பன் வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் தேவி, நான்சி நோக்கவுரையாற்றினர். பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் எழிலரசி கலந்து கொண்டு, எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு கருத்துரையாற்றினர். செவிலியர் பாக்கியலட்சுமி மாணவர்களுடன் கலந்துரையாடினார். எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி நன்றி கூறினார்.