உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ.,விற்கு புதுச்சேரி ஒதுக்கீடு

பா.ஜ.,விற்கு புதுச்சேரி ஒதுக்கீடு

புதுச்சேரி : ''லோக்சபா தேர்தலில், புதுச்சேரி தொகுதி பா.ஜ.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் யார் என்பதை அக்கட்சி அறிவிக்கும்,'' என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.புதுச்சேரி கதிர்காமம் பகுதியில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை, முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார். பின், அவர் கூறியதாவது:எங்கள் கூட்டணியில், வரும் லோக்சபா தேர்தலில், புதுச்சேரி தொகுதி பா.ஜ.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. வேட்பாளர் யார் என்பதை பா.ஜ., அறிவிக்கும். தேர்தல் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி புதுச்சேரிக்கு நிச்சயம் வருவார்; அதில், எந்த சந்தேகமும் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை