மேலும் செய்திகள்
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
11-Oct-2024
புதுச்சேரி: முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003-ம் ஆண்டு 10-ம் வகுப்பில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவி ராஜலட்சுமி வரவேற்றார். முன்னாள் மாணவர் மோகன்ராஜ், மகேஷ்வரி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தனர்களாக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆறுமுகம், சர்வேஷ்வரன், பரமசிவம் மற்றும் உற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், பள்ளியில் 2003ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு- அ பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தாங்கள் கல்வி பயிற்றுவித்த விதங்கள் குறித்து நினைவு கூர்ந்து பகிர்ந்தனர்.சிறப்பு விருந்தினர்கள் கவுரவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் முத்துக்குமார் தொகுத்து வழங்கினார்.
11-Oct-2024