உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி கவிஞருக்கு அம்பேத்கர் விருது

புதுச்சேரி கவிஞருக்கு அம்பேத்கர் விருது

புதுச்சேரி: சென்னையில் நடந்த விழாவில், புதுச்சேரி கவிஞர் பாலசுப்ரமணியத்திற்கு அம்பேத்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தமிழ்நாடு, ஆதிதிராவிடர் அறக்கட்டளை சார்பில் சென்னை நாள் மற்றும் மாவீரர் நாள் விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன், புதுச்சேரியை சேர்ந்த கவிஞர் பாலசுப்ரமணியத்திற்கு அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்தார். விருத பெற்ற கவிஞருக்கு, மக்கள் தேசம் கட்சி தலைவர் ஆசைத்தம்பி, திரைப்பட இயக்குனர் ரவி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை