உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சம்பளம், போனஸ் தொகை வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

சம்பளம், போனஸ் தொகை வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரி : நிலுவை சம்பளம் மற்றும் போனஸ் வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.புதுச்சேரியில் 1000க் கும் அதிகமான நிரந்தர அங்கன்வாடி ஊழியர்களும், 200 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.நிரந்தர ஊழியர்களுக்கு கடந்த 2 மாத சம்பளம், போனஸ் வழங்கப்படவில்லை. ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 8 மாதங்கள் சம்பளமும், போனஸ் வழங்கப்படவில்லை.சம்பளம் மற்றும் போனஸ் வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு சட்டசபை அருகே, செயின்ட் ழான் வீதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் நேற்று 2வது நாளாக தொடர்ந்தது. அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவி ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.செயலாளர் தமிழரசி, பொருளாளர் செல்வராணி முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் சத்யா, லதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை