சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை அன்னாபிேஷகம்
புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக் குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை 5ம் தேதி மாலை அன்னாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. அதனையொட்டி, மூலவர் மற்றும் நந்தியம் பகவானுக்கு, அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து அன்னம் மற்றும் பல வகையான காய்கறிகளால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.