உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் ஆண்டு விழா

அரசு பள்ளியில் ஆண்டு விழா

புதுச்சேரி: வில்லியனுார் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியை ரேணுகா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வட்டம் 4 பள்ளித் துணை ஆய்வாளர் அமல்ராஜ் லீமாஸ் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.அதனைத்தொடர்ந்து மாணவர்களின் பாட்டு, கவிதை, நடனம், மாறுவேடம் என கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மணிமாறன், வெங்கடேசன், கிரிஜா, லட்சுமி காந்தா, குணவதி, பள்ளி ஊழியர் அமுதா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ