உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பதிவுத்துறையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி

பதிவுத்துறையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி

புதுச்சேரி: லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, பத்திர பதிவு துறையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் வரும் 28 முதல் நவ. 3ம் தேதி வரை கடைபிடிக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, புதுச்சேரி கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சாரதா கங்காதரன் கல்லுாரி, புதுச்சேரி வட்டார போக்குவரத்து துறை லஞ்ச ஒழிப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.பி., மோகன்குமார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். போக்குவரத்து துறை துணை ஆணையர் குமரன் முன்னிலை வகித்தார்.அதைத் தொடர்ந்து, நேற்று மாவட்ட பத்திர பதிவு துறையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பதிவாளர் தயாளன் தலைமையில், துறை ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலபதி, தனசேகரன், ராமு முன்னிலை வகித்தனர்.லஞ்சம் ஒழிப்பு குறித்து விளக்கிய போலீசார், அனைத்து ஊழியர்களும் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை