மேலும் செய்திகள்
சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
22-Oct-2024
புதுச்சேரி; இந்திய நுண்ணுயிரியலாளர் சங்கம் புதுச்சேரி கிளை சார்பில், நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கடற்கரை சாலை காந்தி சிலை எதிரில் துவங்கிய ஊர்வலத்தை கவர்னர் கைலாஷ்நாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால், அரசு மருத்துவமனை இயக்குநர் (பொ) செவ்வேள் முன்னிலை வகித்தனர்.புதுச்சேரியில் உள்ள பல்வேறு மருத்துவ கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மருத்துவ மாணவர்கள், ஆண்டிபயாட்டிக்ஸ் மருந்துகளை சரியாக பயன்படுத்துங்கள் என, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் கடற்கரையை அடைந்தது.
22-Oct-2024