சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கும் திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு
பு துச்சேரி தட்டாஞ்சாவடி மாவட்ட தொழில் மையம், பல்வேறு திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தச்சர், படகு தயாரிப்பாளர், கவசம் தயாரிப்பாளர், கொல்லர், சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர், பூட்டு தயாரிப்பவர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, காலணி தைப்பவர், கொத்தனார், கூடை, பாய் தயாரிப்பவர், கயிறு நெசவாளர், பொம்மை தயாரிப்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலை தொடுப்பவர், சலவை தொழிலாளி, தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர் என, பயனாளிகள் பயன்பெறலாம். சுயதொழில் தொடங்க மாநில அரசின் ஊக்குவிக்கும் திட்டம்: இத்திட்டத்தில் சேர புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். வயது, வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இத்திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம், மானியத்துடன் நிதியுதவி பெறலாம். புதுச்சேரி, மாகி மற்றும் ஏனாம் பகுதியினரின் திட்ட செலவு ரூ.50 ஆயிரமாக இருந்தால் 50 சதவீதமும், காரைக்கால் மாவட்டத்தினருக்கு 55 சதவீதம் மானியம் வழங்கப்படும். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக இருப்பின் திட்ட செலவு 40 சதவீதம் அதிகப்பட்டசம் ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும். இத்திட்டத்தில் edistrict.py.gov.inஇணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு, மாவட்ட தொழில் மைய மேலாளரை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசின் பிரதமர் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்: புதுச்சேரியில் தொடர்ந்து 3 ஆண்டு வசிப்பவராகவம், 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். திட்ட செலவின அடிப்படையான தொழில்களுக்கு ரூ.5 லட்சத்திற்கு குறைவாகவும், உற்பத்தியை அடிப்படையாக கொண்ட தொழில்களுக்கு ரூ.10 லட்சம் குறைவாக இருந்தால் கல்வி தகுதி தேவையில்லை. உற்பத்திய அடிப்படையாக கொண்ட திட்டங்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு அதிகமாகவும், தேவையை அடிப்படையாக கொண்ட திட்டங்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால், கல்வித் தகுதி குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியை அடிப்படையாககொண்ட திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.50 லட்சமும், சேவையை அடிப்படையான திட்டங்களுக்கு அதிகபட்சம் ரூ.20 லட்சம் வழங்கப்படும். வருமான வரம்பு இல்லை. தொழில்முனைவோர் வளர்ச்சி திட்டத்திற்கான பயிற்சி 2 முதல் 3 வாரம் கட்டாயப் பயிற்சி வழங்கப்படும். தொழில் முனைவோர் செலுத்தவேண்டிய சொந்த பங்களிப்பு திட்ட வரைவு தொகையில் பொதுப்பிரிவு 10 சதவீதம், சிறப்பு பிரிவுக்கு 5 சதவீதம் அளிக்க வேண்டும். திட்ட வரைவு தொகையில் பொதுப்பிரிவிற்கு நகரப் பகுதியினருக்கு 15 சதவீமும், கிராம பகுதியில் 25 சதவீத மானியம், சிறப்பு பிரிவிற்கு நகர பகுதிக்கு 25 சதவீதமும், கிராம பகுதியில் 35 சதவீம் வழங்கப்படும். பயிற்சி முடித்த பின் கடன் வழங்கப்படும். திட்டத்தை செயல்படுத்தும் முகமைகள், புதுச்சேரி மாவட்ட தொழில் புதுச்சேரி கதர் மற்றும் கிராமிய தொழில் வாரியம், ஒருங்கிணைப்பு முகமை கதர் மற்றும் கிராமிய தொழில் ஆணையம், விண்ணப்பங்களை https://www.kviconline.gov.in/pmegphome/index.jsp என்ற இணையதளம் வழியாக விண் ணப்பிக்கலாம்.