உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ட்ரோன் டெக்னீஷியன் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

ட்ரோன் டெக்னீஷியன் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி: ட்ரோன் டெக்னீஷியன் தொழிற் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற் பயிற்சி நிலையத்தில், 6 மாத கால புதிய தொழிற் பயிற்சி பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கைக்கானவிண்ணப்பங்கள்,நேற்று, முதல் மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ.,யில் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்வழங்க வரும் 2ம் தேதி, கடைசி நாளாகும்.இந்த பயிற்சியில் ஆண், பெண் இருபாலரும் சேரலாம். குறைந்தது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பட்டயம், பட்ட படிப்பு, மாணவர்களும், கூடுதல் தகுதி இருந்தால், பத்தாம் வகுப்புமதிப்பெண்நகல் சான்றிதழுடன்,இணைத்து விண்ணப்பிக்கலாம்.பயிற்சின் போது, ஒவ்வொரு மாதமும், ஆயிரம் ரூபாய்,உதவித் தொகை வழங்கப்படும். மதியம் உணவு, சீருடை,வழங்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு,வேலை நாட்களில், 9894380176மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு, மேட்டுப்பாளையம் அரசுஆண்கள் ஐ.டி.ஐ., முதல்வர் அழகானந்தன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை