உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

 அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி: அரசு போட்டி தேர்வில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தொழிலாளர் துறை செயலர் ஸ்மித்தா செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, வேலை வாய்ப்பகம், அரசு வேலைக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க இருப்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது. வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் https://labour.py.gov.inஇணைய தளத்தில் உள்ள படிவத்தை இன்று 19ம் தேதி காலை 9:30 மணி முதல் வரும் 28ம் தேதி மாலை 5:30 மணிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். நேரடி விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும், விவரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி