உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய வருவாய் வழி படிப்பு உதவி விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய வருவாய் வழி படிப்பு உதவி விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி: எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை தேர்வு திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இதுகுறித்து, பள்ளி கல்வி, இணை இயக்குனர், சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட, அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், பொருளாதரத்தில், பின் தங்கிய, இடைநிற்றலை தவிர்ப்பதற்காக மத்திய கல்வி அமைச்சகம் மூலம், புதுச்சேரி பள்ளி கல்வி இயக்கத்தால், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வு திட்டம், நடத்தப்பட உள்ளது. தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வு திட்டம், எழுத்து தேர்வின் மூலமாகவும், தகுதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம், சாதி, மண்டல, அடிப்படையில், நடத்த உள்ளது. தேர்வு செய்யப்படும் 125 மாணவ, மாணவிகளுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு ஆண்டு தோறும், 12 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு, மத்திய கல்வித்துறை அமைச்சகம் மூலம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த தேர்வு, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதியில், மார்ச் 1ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பு மாணவர்கள், தங்கள் பள்ளிகள் மூலம், https://schooledn.py.gov.inஇணையதள முகவரில், நாளை முதல், விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர, வரும் பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி