மாணவர்களுக்கு பாராட்டு விழா
புதுச்சேரி, : ஆச்சார்யா பலா சிக் ஷா மந்திர் பள்ளியில் பயின்று மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர உள்ள மாணவர்களை ஆச்சார்யா கல்வி குழும தலைவர் அரவிந்தன் பாராட்டினார்.புதுச்சேரி, தேங்காய்திட்டு ஆச்சார்யா பால சிக் ஷா மந்திர் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பயின்ற 74 மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.விழாவில் பள்ளி தாளாளரும், ஆச்சாரியா கல்வி குழுமத் தலைவர் அரவிந்தன் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார். நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.