மேலும் செய்திகள்
ரோட்டில் கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
30-Nov-2024
புதுச்சேரி : சாலையில் கிடந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மொபைல் போனை சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்த மாற்றுத்திறனாளி கவுரவிக்கப்பட்டார்.ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகர்; மாற்றுத்திறனாளி. நேற்று காலை எல்லப்பிள்ளைச்சாவடி ராஜிவ்காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனை அருகே பைக்கில் வரும்போது, சாலையில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் மொபைல்போன் கிடந்தது.மொபைல்போனை எடுத்த குணசேகர், கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜனிடம் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில், தட்டாஞ்சாவடி இந்தியன் வங்கியில் பணிபுரியும் அலுவலர் ஹரி என்பவரது என தெரியவந்தது.ஹரியை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், குணசேகர் மூலம் மொபைல்போனை ஒப்படைத்தனர். மொபைல்போனை ஒப்படைத்த குணசேகரின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.
30-Nov-2024