உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாழும் கலை அமைப்பு கூட்டு தியான நிகழ்ச்சி

வாழும் கலை அமைப்பு கூட்டு தியான நிகழ்ச்சி

புதுச்சேரி: உலக தியான தினத்தை முன்னிட்டு புதுச்சேரி வாழும் கலை அமைப்பு சார்பில், ஒரு மணி நேரம் கூட்டு தியானம் நிகழ்ச்சி நடந்தது.இ.சி.ஆரில் உள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வாழும் கலை அமைப்பின் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில முதன்மை குழு உறுப்பினர் ஜெயகுமார் தலைமை தாங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ, வேதபுரி அறக்கட்டளை தலைவர் தாமோதரன், முன்னாள் நீதிபதி அருள், ஆடிட்டர் ராமானுஜம் வாழ்த்தி பேசினர். இதில், வாழும் கலை அமைப்பின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட திரளானோர் கூட்டு தியானம் செய்தனர். அமைப்பின் சர்வதேச தலைவர் குருதேவ் ரவிஷங்கர் தலைமையில் நடந்த கூட்டு தியான நிகழ்ச்சி நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை