உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விளையாட்டு வீரர்கள் நல சங்கம் ஆர்ப்பாட்டம்

 விளையாட்டு வீரர்கள் நல சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கம், அடிமுறை சிலம்பம் சங்கம், தமிழ் தேசிய பேரியக்கம் ஆகியன சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி அண்ணா சிலை சந்திப்பு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கினார். சிலம்பம் தற்காப்பு கலை சங்க செயலாளர் அன்புநிலவன், தமிழ் தேசியப் பேரியக்க துணைச் செயலாளர் அருணா, பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேரு எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசினார். ஜெகநாதன், அழகர், பிரவீன், முருகன், சுந்தராஜன், ரமேஷ், சத்தியமூர்த்தி, ஞானப்பிரகாசம், விஜயகுமார், சுசீந்திரன், கலைவாணன் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், சிலம்பம் விளையாட்டிற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஊக்க தொகை வழங்க வேண்டும். என்.ஐ.எஸ்., பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும், அரசு பணிக்கான வயது வரம்பை உயர்த்திட வேண்டும். தொகுதி வாரியாக உள் மற்றும் வெளி விளையாட்டரங்கம் அமைக்க வேண்டம். தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களுக்கான அனைத்து செலவையும் அரசே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை