மேலும் செய்திகள்
என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு
30-Oct-2024
என்.எஸ்.எஸ்., முகாம் துவக்கம்
16-Oct-2024
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி, மாணவி சக்தி சரஸ்வதி மாநில அளவில் நடந்த ஜூனியர் பெண்கள் பளு துாக்கும் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.அவருக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி முதல்வர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை மதனசுந்தரி வரவேற்றார். துணை முதல்வர் தில்லைக்கண்ணு காமராஜ் முன்னிலை வகித்தார். ஆசிரியர் மணிமாறன் விழாவினை தொகுத்து வழங்கினார்.விழாவில் சிறப்பு அழைப்பளராக மாநில திட்ட இயக்குனர் தினகரன் பங்கேற்று, மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளியில் தற்காப்பு கலை பயிலும் மாணவிகளுக்கு டி சர்ட் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் எழில்வேந்தன் செய்திருந்தார். விரிவுரையாளர் லதா நன்றி கூறினார்.
30-Oct-2024
16-Oct-2024