உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலாஜி சிக் ஷா மந்திர் பள்ளியில் விழிப்புணர்வு

பாலாஜி சிக் ஷா மந்திர் பள்ளியில் விழிப்புணர்வு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் பாலாஜி சிக் ஷா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் அழகப்பன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக சமக்ர சிக் ஷா ஒருங்கிணைப்பாளர் ஹெலன்ராணி, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் போக்சோ விழிப்புணர்வு குறித்து பேசினார்.தொடர்ந்து பெண்கள், குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்து பள்ளி ஆசிரியைகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.நிகழ்ச்சியில் ஏம்பலம் பாலாஜி மேல்நிலைப் பள்ளி, சிக் ஷா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.பள்ளி துணை முதல்வர் பாலாஜி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை