மேலும் செய்திகள்
பாலின சமத்துவ விழிப்புணர்வு
17-Jan-2026
நெட்டப்பாக்கம்: ஏரிப்பாக்கம் பஞ்சாயத்து மகளிர் கூட்டமைப்பு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஏரிப்பாக்கத்தில் நடந்தது. பேரணியில் 50க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டு, பாலின சமத்துவம் குறித்தும், பெண்களுக்கு எதிரான பாலின விழிப்புணர்வு அடங்கிய பாததைகள் ஏந்தி மகளிர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி ஏரிப்பாக்கம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஏரிப்பாக்கம் பகுதிக்கு வந்த டைந்தது. தொடர்ந்து பாலின சமத்துவம் குறித்து மகளிர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். ஏற்பாடுகளை கிராம சேவக் செந்திலரசு, மலர்கொடி, சமூக வல்லுனர் சாந்தி, கணக்காளர் நதியா, தலைவர் சரளா, உறுப்பினர்கள் ரஞ்சிதா, முத்துலட்சுமி, செங்கேணி ஆகியோர் செய்திருந்தனர்.
17-Jan-2026