உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி

விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம், : நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற தலைப்பிலான மத்திய அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி ஏம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.நிகழ்ச்சியில், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, அமைச்சர் சாய் சரவணன் குமார் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளின் மூலமாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில், பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் விடுபட்ட பயனாளிகள் திட்டத்தில் சேர்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், பொது மக்கள் விண்ணப்பித்து பயனடைந்தனர். தொடர்ந்து பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், குடிமைப்பொருள் வழங்கல் துறை தாசில்தார் அய்யனார், துணை மாவட்ட கலெக்டர் மகாததேவன், கொம்யூன் பஞ்சாயத்து இளநிலைப் பொறியாளர்கள் ராமலிங்கேஸ்வராவ், அய்யப்பன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை