உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி : பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் மற்றும் ஹெல்ப்பேஜ் இந்தியா இணைந்து மனநலம் மற்றும் முதியோர்கள் நலன் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை, செயின்ட் பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சியில், மூத்த குடிமக்களின் சங்க கவுரவத் தலைவர் தேவநாதன், தலைமை தாங்கினார். தலைவர் வேணுகோபால், துணைத் தலைவர் டாக்டர் நளினி, செயலாளர்கள் கிருஷ்ணராஜ், செல்வராஜ், பொருளாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.மன அழுத்தம், கவலைகள், மறதி இவற்றிற்கான தீர்வுகள் பற்றி, மன நல மருத்துவர்கள், பானுபிரியா, சரவணன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை