உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீன் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மீன் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம்: ஐ.சி.ஏ.ஆர்.சிபா மற்றும் பெங்களூரு ஆர்.ஆர்.சி., ஆராய்ச்சி நிறுவனம், இந்திய தேசிய உள்நாட்டு மீன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், மீன் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பனையடிக்குப்பம் மோகன்ராஜ் மீன் பண்ணையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு காமராஜர் வேளாண் அறவியல் நிலையம் முதல்வர்  ரவி தலைமை தாங்கினார். புதுச்சேரி மீனவர் நலத்துறை இணை இயக்குனர் டாக்டர் கோவிந்தசாமி  முன்னிலை வகித்தார். சாமிநாதன் பவுன்டேசஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராசு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூர் ஆர்.ஆர்.சி., ஆராய்ச்சி நிறுவனம் முதுநிலை விஞ்ஞானி சதீஷா கலந்து கொண்டு மீன் குஞ்சுகள், மீன் தீவனம், மீன் வகைகள் குறித்தும், மீன்வளத்துறையில் உள்ள திட்டங்கள் குறித்தும், தீவன மேலாண்மை, தண்ணீர் பரமாரிப்பு முறைகள், நோய் மேலாண்மை குறித்து பேசினார். பாரதிதாசன் நன்னீர் மீன் விவசாயிகள் இயக்குனர் மோகன்ராஜ் கருத்துரை வழங்கினார். பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட மீன் விவசாயிகள் கலந்து கொண்டனர். சிவபிரகாசம் நன்றி கூறினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை