உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் பள்ளி மாணவி உலக சாதனை நடனம்

பாகூர் பள்ளி மாணவி உலக சாதனை நடனம்

பாகூர்; பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி, பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை படைத்தார்.பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி சுபிக் ஷா. இவர், ராகாஸ் நாட்டியாலயா என்ற அமைப்பு சார்பில் சேலம் அரியானுார் பகுதியில் 1,008 லிங்கம் அமைந்துள்ள மலைச்சரிவில் 'சிவமும் பரதமும்' என்ற தலைப்பில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,008 மாணவிகள் பங்கேற்று 7 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடினர்.இந்த நிகழ்வை, துபாய் நாட்டை சேர்ந்த ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், மாணவியை சுபிக்ஷா, நாட்டியச் சிற்பம் உலக சாதனை விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றார்.அவரை பள்ளி துணை முதல்வர் கலியமூர்த்தி, விலங்கியல் விரிவுரையாளர் லோகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை