உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பரோட்டா மாஸ்டர் மாயம் போலீசார் விசாரணை

பரோட்டா மாஸ்டர் மாயம் போலீசார் விசாரணை

புதுச்சேரி : விடுதியில் தங்கியிருந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பரோட்டா மாஸ்டர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆந்திரா மாநிலம், பல்லுவேலா, ஈஸ்ட் கோதாவரியை சேர்ந்தவர், ரவுலங்கி ஆனந்த், 45; இவர், ஆந்திராவில், சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களுக்கு ஆர்டரின் பேரில், பரோட்டா மாஸ்டராக பணி செய்து வந்தார்.இந்நிலையில், புதுச்சேரியில் நடந்த உணவு திருவிழாவிற்கு, பரோட்டா தயாரிக்க, கருவடிக்குப்பத்தை சேர்ந்த, ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் என்பர் மூலம், ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்டார். அதனை அடுத்து, மறைமலை அடிகள் சாலையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த 13ம் தேதி அறையில் இருந்து காணாமல் போனார். ஆந்திராவில் உள்ள வீட்டுக்கும் அவர் செல்லவில்லை.பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கததால், ராம்குமார் கொடுத்து புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை