| ADDED : ஜன 29, 2024 04:36 AM
புதுச்சேரி : மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு மாநில அளவிலான சிறந்த வாக்காளர் கல்வி குழு விருது வழங்கப்பட்டது.புதுச்சேரி அரசின் தேர்தல் துறை சார்பில் 14-வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் மாநில அளவிலான சிறந்த வாக்காளர் கல்வி குழு விருதினை தலைமை செயலர் ராஜிவ் வர்மா மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு வழங்கி பாராட்டினார்.இதனையொட்டி தக் ஷ ஷீலா பல்கலைக்கழக வேந்தரும்,மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன்,பொருளாளர் ராஜராஜன்,மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குனர் வெங்கடாஜலபதி ஆகியோர் பாராட்டினர்.விழாவில் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகடமிக் டீன்கள் அன்புமலர்,அறிவழகர்,ஆராய்ச்சி துறை டீன் வேல்முருகன்,அனைத்து பள்ளி டீன்கள்,துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி வாக்காளர் கல்வி குழு,ஓட்டுப்பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல்,தேர்தல் குறித்த பல விழிப்புணவுர்களை மாணவர்களுக்கும், அருகில் உள்ள கிராமத்தினருக்கும் ஏற்படுத்தி வருகின்றது.வாக்காளர் கல்வி குழுவின் நோடல் அதிகாரி கருணாகரன் நன்றி கூறினார்.