உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பகவான் ராமகிருஷ்ணா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

பகவான் ராமகிருஷ்ணா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

வில்லியனுார்: வடமங்கலம் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் சாதனை படைத்துள்ளது.மாணவர் காத்தமுத்து 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம், மாணவர் அகில்ஷர்மா 473 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், மாணவி தீபிகா 469 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.450க்கு மேல் 7 பேர், 400க்கு மேல் 19 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும், தமிழில்-94, ஆங்கிலம்-99, கணிதம்-97 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பள்ளி தாளாளரும், புதுச்சேரி மாநில சுயநிதி பள்ளிகளின் கூட்டமைப்பு பொருளாளர் சிவசுப்ரமணியம் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ராஜா, சங்கீதா, ரத்தினதேவி, சூசைவியாகுளம், சாரதா, ஜாக்குலின் மேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.பள்ளி தாளாளர் சிவாசுப்ரமணியன் கூறுகையில், 'நகரப் பகுதிக்கு இணையாக தொடர்ந்து 19 ஆண்டுகளாக எங்கள் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து வருகிறது. மாணவர்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்த ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும், ஒத்துழைப்பு கொடுத்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ