மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்த நாள் விழா; மாணவர்களுக்கு போட்டி
12-Dec-2024
திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா நடந்தது.பள்ளியின் முதல்வர் சம்பத் தலைமை தாங்கி, பாரதியாரின் உருவ படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.விழாவையொட்டி, மாணவர்களுக்கு இடையே பள்ளி அளவிலான ஓவிய போட்டி, திருக்குறள் ஒப்பித்தல், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் முதல்வர் சம்பத், துணை முதல்வர் சுசீலா சம்பத் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.பள்ளியின் நிர்வாக இயக்குனர் ஹரீஷ்குமார் நன்றி கூறினார். விழாவில், மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிக் மற்றும் மாறுவேடப் போட்டிகள் நடந்தன. ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாசிரியர்கள், அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
12-Dec-2024