மேலும் செய்திகள்
அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
11 minutes ago
மீன் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
12 minutes ago
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்
13 minutes ago
7 பேரிடம் ரூ. 1.22 லட்சம் மோசடி
14 minutes ago
பு துச்சேரி எதிர் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது பீகார் பார்முலா. பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மெகா வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்த மெகா வெற்றிக்கு முக்கிய காரணமாக எதிர்க்கட்சிகள் இரண்டு விஷயங்களை கூறுகின்றனர். அதில், முதல்வர் மகளிர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், அம்மாநிலத்தில் உள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 10,000, செலுத்தியது, மற்றும் எஸ்.ஐ.ஆர்., என்று அழைக்கப்படும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது தான் என்று அடித்து கூறுகின்றனர். பீகாரில் மகளிருக்கு ரூ.10,000 வழங்கியது முதல்வர் நிதீஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிடப்பட்ட தேர்தல் பிரசார யுக்தியாக உருவெடுத்துள்ளது. இந்த யுத்தியால் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் ஓட்டளித்ததால் பீகார் வரலாற்றில் 67 சதவீதம் ஓட்டு எண்ணிக்கை பதிவானது. இதனால் இனி வரும் அனைத்து மாநில தேர்தல்களிலும் பாஜ., பெண்களின் ஓட்டுகளை கவர இந்த யுத்தியை கையாளும் என்பது எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளதால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., - பாஜ., இதே யுக்தியை பயன்படுத்தி பெண் வாக்காளர்களுக்கு ரூ.10,000 வங்கி கணக்கில் செலுத்தினால், அதனை எப்படி எதிர்க்கட்சிகள் சமாளிக்க முடியும் என்பது புரியாமல் உள்ளது. இதனால், புதுச்சேரியில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு பீகார் 'பார்முலா' வயிற்றில் புளியை கரைத்துள்ளது. என்ன செய்யப் போகின்றன எதிர்க்கட்சிகள்.
11 minutes ago
12 minutes ago
13 minutes ago
14 minutes ago