உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக்குகள் மோதல் வாலிபர் பலி

பைக்குகள் மோதல் வாலிபர் பலி

காரைக்கால்: திருநள்ளாறு, பண்டாரவடை பகுதியை சேர்ந்தவர் உமாபாரதி, 23; காரைக்காலில் மொபைல் போன் கடையில் பணிபுரிகிறார். அங்கு பணிபுரியும் கோட்டுச்சேரி செல்வகுமாருடன் பைக்கில் சென்றார். மரைக்காயர் வீதி சந்திப்பில் சென்றபோது, அவர்கள் மீது அவ்வழியாக வந்த மற்றொரு பைக் மோதியது. உமா பாரதி, செல்வகுமார், விபத்தை ஏற்படுத்திய நிரவி பெருமாள் கோவில் தெரு பாலமுருகன் மகன் விஜய், 23, படுகாயமடைந்தனர். மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விஜய் சிகிச்சை பலனின்றி இறந்தார். நகர போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை