உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கழிவு நீர் வாய்க்காலில் கழிப்பிடம் அகற்ற பா.ஜ., கோரிக்கை

கழிவு நீர் வாய்க்காலில் கழிப்பிடம் அகற்ற பா.ஜ., கோரிக்கை

புதுச்சேரி: கழிவு நீர் ஓட்டத்துக்கு தடையாக, வாய்க்கால் நடுவே கட்டப்பட்டுள்ள கட்டண கழிப்பிடத்தை அகற்ற வேண்டும் என, பா.ஜ., முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார். அவர், கவர்னர், தலைமைச் செயலர், பொதுப்பணித் துறை செயலர், கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அதிதி ஓட்டல் அருகேயுள்ள பாலத்தின் அடியில், வாய்க்காலின் நடுவே, புதுச்சேரி நகராட்சியின் மூலம் கட்டணக் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால், கழிவு நீர் தடையின்றி செல்ல முடியாமல் அடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக, ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், எழில் நகர், வசந்தம் நகர், சூரியகாந்தி நகர், தேவகி நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், செந்தாமரை நகர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி விடுகிறது. ஆகையால், வாய்க்காலின் நடுவே கட்டப்பட்டுள்ள, செயல்படாத, கட்டண கழிப்பிடத்தை போர்க்கால அடிப்படையில் அகற்றி, வாய்க்காலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை