மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது
3 minutes ago
பீகார் தேர்தலில் வெற்றி: பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கல்
6 minutes ago
புகையிலை விழிப்புணர்வு முகாம்
6 minutes ago
சுகாதார விழிப்புணர்வு முகாம்
6 minutes ago
புதுச்சேரி: பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில், கைதானவர்களுக்கு பொருளாதார உதவி செய்து வரும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லியனுார், கணுவாப்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமரன், 43; பா.ஜ., நிர்வாகி. இவர் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, பிரபல ரவுடி நித்தியானந்தன் உள்ளிட்ட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு அதே ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) அமைப்பிற்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ., அதிகாரிகள், வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரித்து, முக்கிய தடயங்களை சேகரித்தனர். இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்கள், வழக்கின் முக்கிய சாட்சிகளை போனில் தொடர்பு கொண்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 18ம் தேதி காலாப்பட்டு மற்றும் ஏனாம் சிறைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில், சாட்சிகள் மிரட்டப்படுவது உறுதியானது. அதையடுத்து, வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மூவரை கடந்த வாரம் காவலில் எடுத்து விசாரித்தனர். வழக்கின் சாட்சிகளை கலைப்பதற்கும், வழக்கு செலவினத்திற்காக குற்றவாளிகளுக்கு, ரவுடிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், கட்டப்பஞ்சாயத்து கும்பலை சேர்ந்த பலர் பொருளாதார உதவி செய்து வருவது தெரிய வந்தது. அதன்பேரில், குற்றவாளிகளுக்கு வெளியில் இருந்து பொருளுதவி அளித்து வரும் நபர்களுக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் சம்மன் அனுப்பி, அழைத்து விசாரித்து வருகின்றனர். அதன்படி கடந்த ஒரு வாரத்தில் 50 பேருக்கும் மேற்பட்டோர்களிடம் விசாரித்துள்ளனர். மேலும், சிலரை விசாரிக்க உள்ளனர். என்.ஐ.ஏ.,வின் அதிரடி விசாரணையால் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரவுடிகள் பெரும் கலக்கத்திற்கு ஆளாகி உள்ளனர்.
3 minutes ago
6 minutes ago
6 minutes ago
6 minutes ago