மேலும் செய்திகள்
முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் கார்கே
30-Jul-2025
புதுச்சேரி : புதுச்சேரியில் காங்., ஆட்சியில் பாலம் கட்டியதில் கூட ஊழல் நடந்ததால், பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டியுள்ளதாக, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். அவர், கூறியதாவது, சுதந்திர தினத்தை யொட்டி, இன்று முதல் வரும் 15ம் தேதி வரை பா.ஜ., சார்பில் ஊர்வலம், துாய்மை பணி நிகழ்ச்சிகள் நடக்கிறது. மரக்காணம் - புதுச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலை புதிய நான்குவழி சாலையாக போடுவதற்கு மத்திய அரசு ரூ. 2,157 கோடி அனுமதி அளித்துள்ளது. இந்த சாலையின் நீளம் 46 கிலோ மீட்டர். இதில் 11 கிலோ மீட்டருக்கு இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றவும், 35 கிலோ மீட்டர் முழுவதும் புதிய நான்குவழி சாலை போடவும் இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மரக்காணம் - புதுச்சேரி வரை செங்கல்பட்டு உட்பட அனைத்து ரயில் நிலையங்கள், புதுச்சேரி விமான நிலையம், கடலுார் துறைமுகம் அனைத்தையும் இணைக்கும் வகையில் இந்த சாலை மக்களிடம் ஒப்படைக்கப்படும். பிரதமர் மோடி, புதுச்சேரியை பெஸ்ட் ஆக்க மேற்கொண்ட முயற்சியில் ஒன்றே 55 வயதிற்கு மேற்பட்ட முதியோர் 10 ஆயிரம் பேருக்கு புதிதாக ரூ,2,500 பென்சன் தரும் திட்டத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கார்டு சிவப்பு நிறத்திற்கு ரூ,2,500, மஞ்சள் கார்டுக்கு ரூ.1000 தர தே.ஜ.கூ., அரசு முடிவு செய்துள்ளது. இங்கு ரெஸ்டோபாரை அறிமுகம் செய்தவரே முன்னாள் முதல்வர் நாராயணசாமி தான். பல கொலை குற்றங்களும் அவர் முதல்வராக இருந்த போதே நடந்தது. காங்., ஆட்சியில் இந்திரா காந்தி சிக்னல் - மரப்பாலம் வரை மேம்பாலம் கட்டுவதில் ஊழல் நடந்துள்ளது. மின் கட்டணம் உயர்வுக்கு காரணம் கடந்த கால காங்., அரசு தான். இதை மக்களுக்கு தெரியாமல் இருக்க நாராயணசாமி நாடகம் ஆடுகிறார்' என்றார். செய்தி தொடர்பாளர் அருள்முருகன், ஊடகத்துறை தலைவர் நாகேஸ்வரன், இணை தலைவர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
30-Jul-2025