உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., தேசிய கொடி ஊர்வலம்

பா.ஜ., தேசிய கொடி ஊர்வலம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில், பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷன் சிந்துார் வெற்றியையொட்டி, இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடி ஊர்வலம் நடந்தது.உழவர்கரை தொகுதி மூலக்குளத்திலிருந்து துவங்கிய ஊர்வலத்தில் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் துஷ்யந்த்குமார், மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, கட்சியின் மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி., அமைச்சர் நமச்சிவாயம், மாநில செயலாளர் சரவணன் மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்திரா சதுக்கம் வழியாக பா.ஜ., தலைமை அலுவலகம் வரையில் நடந்த தேசியக் கொடி ஊர்வலத்தில் அனைவரும் தேசியக் கொடியை ஏந்தியபடி ராணுவத்தையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வாழ்த்திக் கோஷமிட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை