அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் கவர்னரிடம் பா.ஜ., மனு
புதுச்சேரி: கோவில் அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் கோரி, பா.ஜ., சார்பில், கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரியாங்குப்பம் தொகுதி பா.ஜ., முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், கவர்னரிடம் அளித்துள்ள மனு விபரம்: புதுச்சேரி கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு அரசு சார்பில், ஓய்வூதியம் வழங்க ஆவணம் செய்ய வேண்டும். குறிப்பாக 35 ஆண்டுகள் பணியாற்றிய அர்ச்சகர்களுக்கு, குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.