மேலும் செய்திகள்
சாந்தி வித்யாலயா 40ம் ஆண்டு விழா
06-Feb-2025
வில்லியனுார்: புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் 40ம் ஆண்டு மாணிக்க விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் 40ம் ஆண்டு மாணிக்க விழா, மூன்று நாட்கள் நடந்தது. முதல்நாள் விழாவில் பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் சாலை சிவசெல்வம் வரவேற்றார். முதல்வர் வரலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். கவர்னர் கைலாஷ்நாதன், பள்ளியின் 40 ஆண்டுகால வளர்ச்சி குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். விழாவில் சிவசங்கர் எம்.எல்.ஏ., வாழ்த்துரை வழங்கினார்.இரண்டாம் நாள் விழாவில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வாழ்த்துரை வழங்கினார். மூன்றாம் நாள் விழாவில் முதல்வர் ரங்சாமி பங்கேற்று, பள்ளியின் 40 ஆண்டுகால சாதனைகள் குறித்து வாழ்த்தி பேசினார். பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.விழாவில் மாணவர்களின் பரதம், மேற்கத்திய, கிராமிய நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
06-Feb-2025