உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  படகு குழாம் திறப்பு

 படகு குழாம் திறப்பு

அரியாங்குப்பம்: புயல் மழையால், 3 நாட்களுக்கு பிறகு, நோணாங்குப்பம் படகு குழாமில் நேற்று படகுகள் இயக்கப்பட்டன. டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்தது. சுற்றுலா இடங்கள், கோவில்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள்,ஓட்டல்களில் மக்கள் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது. புயல் எச்சரிக்கை அறிவிப்பை அடுத்து, நோணாங்குப்பம் படகு குழாம் கடந்த 3 நாட்களாக படகுகள் இயக்காமல் இருந்தன. இந்நிலையில், மழை குறைந்ததை தொடர்ந்து, படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச்சிற்கு நேற்று படகுகள் இயக்கப்பட்டன. ஆனால், குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ