மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் சாவு
01-Apr-2025
பாகூர்:பாகூர் அருகே தென்பெண்ணையாற்றில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் புதிய பாலம் பகுதியில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.கருப்பு நிற முழுக்கை சட்டை மற்றும் சந்தன நிற பேண்ட் அணிந்திருந்தார். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி ரவி கொடுத்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
01-Apr-2025