மேலும் செய்திகள்
பைக் திருடியவர் கைது
03-Apr-2025
புதுச்சேரி:பல்வேறு இடங்களில் பைக் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து, 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.உருளையன்பேட்டை போலீசார் இந்திரா சிக்னல் அருகே நேற்று முன்தினம் வாகன தனிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அந்த வழியாக வேகமாக பைக்கில் வந்த 17 வயதுடைய சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.அதில், உரிமம் மற்றும், பைக்கின் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. மேலும், அவரை விசாரித்ததில், புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியை சேர்ந்த சிறுவன் 17, என்பதும் சாரம் பகுதி, கடலுார் மெயின் ரோடு வனத்துறை, அலுவலகம், மால் உள்ளிட்ட இடங்களில் பைக் திருடி சென்றது தெரியவந்தது.போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அச்சிறுவனை, நேற்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
03-Apr-2025