மேலும் செய்திகள்
குடிக்க பணம் தர மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து
21-Sep-2025
புதுச்சேரி, ; மொபைலில் 'கேம்' விளையாடுவதை தாய் கண்டித்ததால், வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளுடன் மாயமான சிறுவனை போலீசார் தேடிவருகின்றனர். முருங்கப்பாக்கம் பேட்டை சேர்ந்தவர் புகழேந்தி. கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிரசன்னா,16; வேல்ராம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் கடந்த 4ம் தேதி மாலை வீட்டில் 'மொபைலில் கேம்' விளையாடிக் கொண்டிருந்தார். அதனை அவரது தாய் வேல்விழி கண்டித்தார். அதில், கோபித்துக் கொண்ட பிரசன்னா அன்று இரவு 2 மணி அளவில் தனது சகோதரியிடம், நான் இனிமேல் வீட்டில் இருக்க மாட்டேன். வெளியில் எங்காவது சென்று விடுவேன் என கூறிவிட்டு படுத்து துாங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்தபோது, பிரசன்னாவை காணவில்லை. மேலும், வீட்டில் நிறுத்தியிருந்த பிஒய்-01-சியூ-4765 பதிவெண் கொண்ட மஞ்சள் நிற டியோ ஸ்கூட்டரையும் காணவில்லை. மேலும், வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் பணம் மற்றும் 14 சவரன் நகைகளும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகழேந்தி அளித்த புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, காணாமல்போன பிரசன்னாவை தேடிவருகின்றனர்.
21-Sep-2025