உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தவறி விழுந்து கொத்தனார் காயம்

தவறி விழுந்து கொத்தனார் காயம்

புதுச்சேரி : சோலை நகரில் கட்டுமான பணியின் போது, மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் படுகாயம் அடைந்தார்.லாஸ்பேட்டை, சாமிப்பிள்ளை தோட்டம், தவமணி நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 58; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் கோட்டக்குப்பத்தை சேர்ந்த கொத்தனார் காத்தவராயன் மற்றும் வேலை ஆட்கள் மணி, மாலா ஆகியோருடன், சோலை நகரில் உள்ள ராமசாமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார்.வீட்டின் முதல் மாடியில் வேலை செய்து கொண்டிருந்த சுந்தரமூர்த்தி, திடீரென நிலைதடுமாறி கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் சுந்தரமூர்த்தியை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுந்தரமூர்த்தியின் மகன் மணிரத்தினம், முத்தியால்பேட்டை போலீசில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், வேலை வாங்கியதாக வீட்டின் உரிமையாளர் ராமசாமி மீது புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை