உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்ஜெட்: தொழில், வணிக துறைக்கு ரூ122.19 கோடி

பட்ஜெட்: தொழில், வணிக துறைக்கு ரூ122.19 கோடி

தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மற்றும் தொழில் துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நடத்தும் நிறுவனங்கள் உட்பட 40 தொழில் நிறுவனங்களுக்கு ரூ8.50 கோடி நிதியுதவி வழங்கப்படும். விற்பனையாளர் மேம்பாட்டு திட்டங்கள், திறன் மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான பயிற்சிகள் வழங்கப்படும். தொழில் நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி, நிதி மற்றும் சந்தை வாய்ப்புகள் கிடைக்க சேவை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும்.  புதிய தொழில்கள், முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு, காரைக்காலில் 213 ஏக்கரில் பல்துறை சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தட்டாஞ்சாவடியில் 21 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  புதிய முலீடுகள், தொழில் விரிவாக்கம், புதிய துறைகளின் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, புதிய தொழிற்கொள்கை உருவாக்கப்படும். 2026–27 ம் ஆண்டில் தொழில் மற்றும் வணிக துறைக்கு ரூ122.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி