உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்ஜெட்: மாநிலத்தின் தொலைநோக்கு வளர்ச்சி கொண்டது கவர்னர் உரைக்கு ஜோஸ் சார்லஸ் பாராட்டு

பட்ஜெட்: மாநிலத்தின் தொலைநோக்கு வளர்ச்சி கொண்டது கவர்னர் உரைக்கு ஜோஸ் சார்லஸ் பாராட்டு

கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் ல.ஜ.க., கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் பேசியதாவது: கவர்னரின் பட்ஜெட்டில் மாநில வளர்ச்சி விகிதம் மைனஸ் - 2.21 சதவீத்தில் இருந்து 8.12 சதவீதமாக உயர்ந்துள்ளது. மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.3,44,926 ஆக அதிகரித்துள்ளது. அரசின் மொத்த வரவு ரூ.13,397 கோடியாக உயர்ந்திருக்கிறது. கட்டமைப்புப் பணிகளுக்கான மூலதனச் செலவு ரூ.765 கோடி உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கதக்கது. உள்கட்டமைப்பில், பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில், ரூ.4,800 கோடி மதிப்பில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடப்பது பாராட்டுக்குரியது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடேசன் நகர் முதல் முள்ளோடை வரை மேம்பாலப் பணிகளும், பழைய துறைமுகத்தில் நியூ பெர்ரி டெர்மினல்  அமைக்கப்பட உள்ளன. சுற்றுலாவை மேம்படுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரிக்கமேடு பகுதியும், கடற்கரையை அழகுபடுத்தும் பாண்டி நெக்லஸ் திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.4,750 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்ட வசதி மாநில வளர்ச்சிக்கு கைகொடுக்கும். கரசூர் மற்றும் தட்டாஞ்சாவடி தொழில் மண்டலங்கள் மூலம் 70,000 வேலைவாய்ப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. 1.10 லட்சம் பள்ளி மாணவர்களுக்கான ஊட்டச்சத்து உணவு மற்றும் விளிம்புநிலை முதியோர்களுக்கான மருத்துவப் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கவர்னரின் இந்த தொலைநோக்கு வளர்ச்சி உரை பாராட்டுக்குறியது. புதுச்சேரி மக்களின் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் இந்த அனைத்து நலத்திட்டப் பணிகளுக்கும் எனது ஆதரவை தருவேன்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ