உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்ஜெட்: கூட்டுறவு துறைக்கு ரூ.62.91 கோடி

பட்ஜெட்: கூட்டுறவு துறைக்கு ரூ.62.91 கோடி

பால்வளம் தேசிய பால்வள மேம்பாட்டு திட்டன்கீழ் பாண்லே நிறுவனத்தில் முழுமையான தானியங்கி வசதி கொண்ட, தினமும் இரண்டு லட்சம் லிட்டர் பாலை சுத்திகரித்து, பேக்கிங் செய்யும் திறன் கொண்ட பால் பண்ணை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியை அதிகரிக்க கிராமப்புற அளவில் பால் கூட்டுறவு பால் சங்கங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. பாண்லோ பால் பூத்கள் நவீனமாக்கப்படும். பாண்லேவில் கொள்முதல் செய்யப்படும் பால் விலையை தரத்தின் அடிப்படையில் உயர்த்தி, அதிகபட்சமாக லிட்டருக்கு ரூ.41 வரை ஊக்கத் தொகை உட்பட வழங்கப்படும். கூட்டுறவு புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியில் ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் வசதிகள் அறிமுகப்படுத்தபடும். ஆயிரம் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.நெட்டப்பாக்கம் மற்றும் சுல்தான்பேட்டையில் வங்கியின் புதிய கிளைகள் துவக்கப்படும். மாநில கூட்டுறவு வீட்டு வசதி இணையம் மூலம் முத்துபிள்ளைபாளையத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் 75 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 2026–27 ம் ஆண்டில் கூட்டுறவு துறைக்கு ரூ.62.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி